ஊதிய ஒப்பந்த ஷரத்துகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொள்ளவுள்ள வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பு நோட்டீசை தொழிற்சங்க நிர்வாகிகள் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர்களிடம் திங்கள்கிழமை அளித்தனர்.
தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த ரூ.7 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த ஷரத்துகளை நடைமுறைப்படுத்த வேண்டும், ஓய்வு பெற்றோருக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, நவம்பர் 1 அல்லது அதற்கு பிறகு ஏதாவது ஒரு நாளில் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கலாம் என தொழிற்சங்கங்கள் ஏற்கெனவே அறிவித்தன.
இந்நிலையில், தொழிற்சங்க நிர்வாகிகள் அந்தந்த போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர்களிடம் வேலைநிறுத்த அறிவிப்புக்கான நோட்டீசை திங்கள்கிழமை வழங்கினர்.
சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரிடம் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொமுச பொருளாளர் கி.நடராஜன் வேலைநிறுத்த நோட்டீசை வழங்கினார். சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜன் கூறியது: போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு கடந்த 10 மாதங்களாக பணப்பலன்களையும் வழங்கவில்லை. தொழிலாளர்களிடம் பிடித்த செய்த ரூ.7 ஆயிரம் கோடியை அவர்களது கணக்கில் சேர்க்க வேண்டும், ஊதிய ஒப்பந்தத்தில் செய்துள்ள ஷரத்துகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த வேண்டும், தினசரி இழப்புகளை அரசே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பலமுறை வலியுறுத்தியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அடுத்தகட்டமாக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவுள்ளோம். இதற்கான அறிவிப்பு நோட்டீசை நிர்வாக இயக்குநர்களிடம் வழங்கியுள்ளோம். எங்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் 23-ஆம் தேதி முதல் நவம்பர் 1-ஆம் தேதிக்குள் எங்களது வேலைநிறுத்தத் தேதியை அறிவிப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!
சைனஸுக்கு தீர்வு...
பாட்டி வைத்தியம்...
கண்களை பாதுகாக்க...
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


