நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை

குற்றாலம் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, குற்றாலம் பேரருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

News image

குற்றாலம் பேரருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்.

Updated On :9 அக்டோபர் 2018, 2:44 am IST


குற்றாலம் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, குற்றாலம் பேரருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க போலீஸார் 
தடைவிதித்தனர்.
குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமை குற்றாலம் பேரருவியின் ஓரமாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். திங்கள்கிழமை காலை தண்ணீரின் சீற்றம் குறைந்ததை அடுத்து, பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், பிற்பகல் முதல் பெய்த மழை காரணமாக, குற்றாலம் பேரருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. 2 அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஐந்தருவி மற்றும் சிற்றருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.