சென்னை எழும்பூரில் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது,
வீடு மற்றும் பொது இடங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும். காலி இடங்களில் மழை நீர் தேங்குவதை தடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்குவால் கர்ப்பிணிகள், பச்சிளங் குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதால் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் தங்களுக்கு ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகளை அலட்சியப்படுத்தக் கூடாது. காய்ச்சல் வந்தவுடன் சிகிச்சை பெற வேண்டும். தமிழகத்தில் இந்த வருடம் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் மற்றும் பன்றி காய்ச்சலுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
காய்ச்சலுக்கு போலியான மருந்து வழங்கிய 840 பேர் பிடிபட்டுள்ளனர். டெங்கு போன்ற காய்ச்சல் பாதிப்பினை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து தனியார் மருத்துவர்களுக்கு செவ்வாய்கிழமை ஆலோசனை வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரியான் பராக் ஃபார்முக்கு வருவார், வெற்றி பெற்றுத் தருவார்: விக்ரம் ரத்தோர்

தமிழக தேர்தல்: என்னென்ன விதிகள் அமலில் இருக்கும்?
தனுஷ் தயாரிக்கும் புதிய படம்!

ஸ்கூட்டருக்கு இணையாக... அமேசானில் கிடைக்கும் புதிய மின்சார சைக்கிள்!
வீடியோக்கள்

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை


