
உரிய சிகிச்சை அளிக்காததால் நோயாளி உயிரிழந்த விவகாரத்தில் சென்னை தனியார் மருத்துவமனைக்கு ரூ. 57.74 லட்சம் அபராதம் விதித்து மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஒடிஸா மாநிலம், பெஜிபூரைச் சேர்ந்த நரசிங்க பதி மகன் அபானிகுமார் பதி. சென்னை தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அபானிகுமார் பதி, மூலநோய் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2003 அக்டோபர் 15-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நவம்பர் 2-ஆம் தேதி மாரடைப்பு, மூச்சுத் திணறல் காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
15 நாள்கள் சிகிச்சைக்காக அபானிகுமார் பதியின் தந்தை நரசிங்க பதி ரூ. 3 லட்சம் செலுத்தியிருந்தார். இந்நிலையில், தனது மகன் அபானிகுமார் பதியின் உயிரிழப்புக்கு தனியார் மருத்துவமனையின் சேவை குறைபாடும், மருத்துவர்களின் அலட்சியமுமே காரணம் என்றும் அதற்கு நிவாரணமாக மருத்துவமனை நிர்வாகம் ரூ. 96 லட்சம் வழங்க வேண்டும் என்று சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் நரசிங்க பதி வழக்குத் தொடர்ந்தார்.
ரூ.58 லட்சம் அபராதம்: இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் மன்ற உறுப்பினர்கள் கே.பாஸ்கரன், எஸ்.எம்.முருகேசன் ஆகியோர் புதன்கிழமை அளித்த உத்தரவில், அபானிகுமார் பதியின் உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியமும், சேவைக் குறைபாடுமே காரணம் எனத் தெரியவந்துள்ளது. எனவே, அவரது உயிரிழப்புக்கு நிவாரணமாக ரூ. 44 லட்சத்து 64 ஆயிரமும், அவரது பெற்றோரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக ரூ.10 லட்சமும், மருத்துவமனைக்கு அவர் செலுத்திய ரூ. 3 லட்சமும், வழக்கு செலவுத் தொகையாக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ. 57 லட்சத்து 74 ஆயிரத்தை மருத்துவமனை நிர்வாகம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






