
ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் 3 பேர் கைது
திருவாரூரில் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தியது தொடர்பாக அரசுப் பள்ளி ஆசிரியர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டு,

திருவாரூர் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவசெந்தில்குமாரை பாராட்டுகிறார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. விக்ரமன்.
திருவாரூரில் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தியது தொடர்பாக அரசுப் பள்ளி ஆசிரியர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டு, வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருவாரூரில் ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் நீதிமோகன், கடந்த 8-ஆம் தேதி இருசக்கர வானத்தில் சென்றபோது காரில் வந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டார். அதன்பின்னர் அவரை விடுவிக்க ரூ.10 கோடி கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நீதிமோகன் அலுவலகத்தின் உதவியாளர் ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, நீதிமோகனை போலீஸார் தேடி வந்தனர்.
இதனிடையே, நீதிமோகன் மாதத் தவணை திட்டத்தில் நிலம் வழங்குவதாக பலரிடம் பணமோசடி செய்ததாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, அவரால் பாதிக்கப்பட்ட யாரேனும் அவரைக் கடத்தியிருப்பார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மன்னார்குடி அரசுப் பள்ளி ஆசிரியர் வெங்கடாசலம் (48) உள்ளிட்ட பலர் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, ஆசிரியர் வெங்கடாசலத்தை கைது செய்த போலீஸார், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டையில் இருந்த நீதிமோகனை மீட்டனர்.
மேலும், நீதிமோகன் தனக்கு ரூ. 7.50 கோடி பணம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும், அவரைக் கடத்த ரூ.3 லட்சம் முன்பணம் வழங்கியதாகவும் வெங்கடாசலம் கூறியுள்ளார். அத்துடன், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கீழப்பனையூரைச் சேர்ந்த ஜான் கென்னடி (43), வடக்குப் பனையூரைச் சேர்ந்த ரசாக் என்கிற இமையராஜன் (36) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, மேற்கண்ட 3 பேரும் வியாழக்கிழமை நீதிபதி குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தனிப்படை போலீஸார் தேடிவருகின்றனர்.
நீதிமோகன் நிலம் வழங்குவதாக பணத்தைப் பெற்றுக்கொண்டு நிலம் வழங்காமலும், பணத்தை திரும்ப அளிக்காததாலும் ஆசிரியர் வெங்கடாசலம் கடந்த 2014-ஆம் ஆண்டு திருவாரூர் குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்துள்ளார். எனினும், அந்த புகாரின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காததால், கடத்தல் முயற்சியை மேற்கொண்டதாக வாக்குமூலத்தில் அவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பாராட்டு...
தனிப்படை போலீஸார் விரைந்து செயல்பட்டு, கடத்தப்பட்ட நீதிமோகனை மீட்டு, எதிரிகளைக் கைது செய்ததற்காக, திருவாரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன், திருவாரூர் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவசெந்தில்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கண்ணன், பாலமுருகன், சுப்பிரமணியன், தலைமைக் காவலர்கள் காமராஜ், ரவி, காவலர் சுந்தரராமன் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. விக்ரமன் நேரடியாக திருவாரூர் நகர காவல் நிலையத்துக்குச் சென்று பாராட்டுகளைத் தெரிவித்தார்.
ரியல் எஸ்டேட் அதிபரை மிக விரைவில் மீட்டு, அவரை கடத்திய 3 பேரை கைது செய்தமைக்காக,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






