காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிகேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

அதிமுகவில் மேலும் 5 அமைப்புச் செயலாளர்கள்: புதிதாக வர்த்தகம்-கலை அணிகள்

அதிமுகவின் நிர்வாக அமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அமைப்புச் செயலர்களாக மேலும் 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், வர்த்தகம்,

Published On :

அதிமுகவின் நிர்வாக அமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அமைப்புச் செயலர்களாக மேலும் 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், வர்த்தகம், கலைப் பிரிவு ஆகிய புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அதிமுக அமைப்புச் செயலர்களாக முன்னாள் அமைச்சர் ப.மோகன், சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.முருகையாபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. என்.சின்னத்துரை, முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி என்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் எம்.பரஞ்ஜோதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயப் பிரிவுத் தலைவராக தருமபுரி மாவட்ட அம்மா பேரவை முன்னாள் செயலர் டி.ஆர்.அன்பழகனும், செயலராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய அணிகள்: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வர்த்தக அணிக்குத் தலைவராக சட்டப் பேரவை உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுனன், கலைப் பிரிவுத் தலைவராக திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கலைப் பிரிவுச் செயலராக திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரும், செய்தித் தொடர்பாளர்களாக நிர்மலா பெரியசாமி, திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.
அதிமுகவின் துணை அமைப்புகளான அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, மகளிர் அணி, சிறுபான்மையினர் நலப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கும் துணை, இணைச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அறிவிப்பு: அதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமையும் (செப். 14) தொடர்ந்து நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விவரிக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.