ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மத்திய, மாநில அரசுகள் அகற்றப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

மக்களுக்கு விரோதமாகச் செயல்படும் மத்திய, மாநில அரசுகளை தூக்கி எறிவதற்கான களத்துக்கு திமுகவினர் அனைவரும் தயாராக வேண்டும் என்று அக் கட்சியின் தலைவர்

Published On :


மக்களுக்கு விரோதமாகச் செயல்படும் மத்திய, மாநில அரசுகளை தூக்கி எறிவதற்கான களத்துக்கு திமுகவினர் அனைவரும் தயாராக வேண்டும் என்று அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: 
பெரியார், அண்ணாவின் பிறந்த நாள் விழாவும், திமுகவின் துவக்க விழாவும் முப்பெரும் விழாவாக விழுப்புரத்தில் சனிக்கிழமை (செப்.15) கொண்டாடப்படுகிறது. இது, ஆண்டுதோறும் கருணாநிதியால் தவறாமல் மேற்கொள்ளப்பட்ட பெருவிழா. 
மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெறும் மக்கள் விரோத அரசுகள் தூக்கி எறியப்பட வேண்டும். அதற்கான அமைதியான அறநெறிக் களத்துக்கு நாம் தயாராக வேண்டும். கூட்டணிக் கட்சிகள் துணை நிற்கின்றன. 
நாடு எதிர்கொண்டுள்ள சவாலை அறிவோம். அதனைச் சந்திக்க ஆயத்தமாகவும் ஆர்வத்துடனும் இருக்கிறோம் என்ற சூளுரையை மேற்கொள்ள திமுகவினர் அனைவரும் முப்பெரும் விழாவில் ஒன்றிணைய வேண்டும்.
திமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்றபிறகு, கட்சியினர் அனைவரையும் சந்திக்கும் ஆர்வத்துடன் விழுப்புரம் நோக்கி விரைய உள்ளேன். விழாவில் பெரியார் விருது மும்பை வி.தேவதாசனுக்கும், அண்ணா விருது பொன். ராமகிருஷ்ணனுக்கும், கருணாநிதி விருது குத்தாலம் பி.கல்யாணத்துக்கும், பாரதிதாசன் விருது இந்திரகுமாரிக்கும் வழங்கப்பட உள்ளது. மேலும், இந்த ஆண்டு முதல் க.அன்பழகன் பெயரில் அறிமுகம் செய்யப்படும் பேராசிரியர் விருது மா.செங்குட்டுவனுக்கும் வழங்கப்பட உள்ளது.
திமுகவைச் சிலர் குடும்பக் கட்சி என்று விமர்சனம் செய்யும்போது, அவர்களின் அறியாமையை எண்ணி மனதுக்குள் சிரித்துக் கொள்வேன். இது குடும்பக்கட்சி தான். குடும்பம் குடும்பமாக லட்சோப லட்சம் குடும்பங்கள் கட்சி விழாவில் பங்கேற்கும் தொண்டர்களை இந்த இயக்கத்தைத் தவிர வேறெந்த இயக்கத்தில் காண முடியும்? என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.