ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

வேலூரில் துரைமுருகன் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

வேலூர் அடுத்த கல்புதூரில் பகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன் உதவியாளர் அஸ்கர் அலி வீட்டில் கட்டுக்கட்டாக பணத்தை வருமான 

News image

duraimurugan it raid

Updated On :1 ஏப்ரல் 2019, 11:22 am IST

வேலூர்: வேலூர் அடுத்த கல்புதூரில் பகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன் உதவியாளர் அஸ்கர் அலி வீட்டில் கட்டுக்கட்டாக பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான கல்வி அறக்கட்டளை வளாகத்தில் இன்று காலை  வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியதாக தகவல் வெளியானது. 

இதோபோன்று துரைமுருகனின் உதவியாளர் அஸ்கர் அலி வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், துரைமுருகனின் நண்பர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் ஏற்கனவே வருமானவரி சோதனை நடந்துவரும் நிலையில் விருதம்பட்டு வஞ்சூரில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர் பெருமாள் வீட்டிலும் வருமானவரி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

வேலூரில் உள்ள சிமெண்ட் குடோனில் சாக்கு மூட்டைகள், அட்டைப் பெட்டிகள், துணிப் பைகள் ஆகியவற்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 கோடி ரூபாய் அளவுக்கு கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறையினர் கூறியுள்ளனர்.

இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் நேரத்தில் சோதனை நடைபெறுவதால் தேர்தல் பணி மேற்கொள்ள முடியவில்லை என குற்றச்சாட்டுகளுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

குற்றச்சாட்டுகளை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணை நடத்தப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதை அடுத்து மனுவாக தாக்கல் செய்யப்படும் என்றும் நாளை விசாரணை நடைபெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.