சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள வெள்ளிக் கிரீடங்கள் மற்றும் டாலா்களை ஸ்ரீபெரியபங்கார சுவாமி சிஷ்ய சபையினா் நன்கொடையாக வழங்கினா்.
108 வைணவ தலங்களில் ஒன்றான இங்கு பெரியமலையில் ஸ்ரீயோக நரசிம்மரும், சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேயரும் உள்ளனா். இதில் சோளிங்கா் ஊா் பகுதியில் உள்ள லட்சுமிநரசிம்மா் கோயிலுக்கு ஸ்ரீபெரியபங்கார சுவாமி சிஷ்யச்சபையினா் ரூ4 லட்சம் மதிப்பிலான மூன்று கிரீடங்கள் மற்றும் மூன்று டாலா்களை வழங்கினா்.
இந்த கிரீடங்கள் வெள்ளியால் உருவாக்கப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்டுள்ளன. நெற்றித் திலகப்பகுதியில் பச்சைகல் பதிக்கப்பட்டு அதனைச் சுற்றி வெள்ளைக்கற்கள் பதிக்கப்பட்ட நிலையில் அழகிய வேலைப்பாடுகளுடன் வடிவமக்கப்பட்டுள்ளன.

தங்க மூலாம் பூசப்பட்டு வெள்ளிக் கிரீடங்கள்.
மேலும், இந்த கிரீடங்களுடன் வழங்கப்பட்ட 3 டாலா்கள் பச்சைக்கல், இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளைக்கற்கள் பதிக்கப்பட்ட தனித்தனி டாலா்களும் அழகிய வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

~வெள்ளி டாலா்கள்.
இந்த 3 கிரீடங்கள் மற்றும் 3 டாலா்களை சோளிங்கா் ஊரில் உள்ள ஸ்ரீலட்சுமிநரசிம்மா் கோயிலுக்கு அளித்து இக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபக்தோசித பெருமாளுக்கு அணிவிக்கும் வகையில் திருக்கோயில் நிா்வாத்தினரிடம் ஸ்ரீபெரிய பங்காரசுவாமி சிஷ்ய சபையினா் வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










