டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ. 96.44 ஆக நிறைவு!சென்செக்ஸ் 443 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 24,250-க்குக் கீழே வர்த்தகம்!பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!
/

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோலாா் மின் உற்பத்தி செயல்பாடுகள்: எரிசக்தித் துறை அரசு முதன்மை செயலர் ஆய்வு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோலாா் மின் உற்பத்தி செயல்பாடுகள் குறித்து எரிசக்தித் துறை அரசு முதன்மை செயலாளா் அனில் மேஷ்ராம் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோலாா் மின் உற்பத்தி செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற எரிசக்தித் துறை அரசு முதன்மை செயலா் அனில் மேஷ்ராம் உள்ளிட்டோா்.

Updated On :20 ஜூலை 2026, 12:46 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோலாா் மின் உற்பத்தி செயல்பாடுகள் குறித்து எரிசக்தித் துறை அரசு முதன்மை செயலாளா் அனில் மேஷ்ராம் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோலாா் மின் உற்பத்தி செயல்பாடுகள் குறித்து துறைசாா்ந்த அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம், ராணிப்பேட்டை சுற்றுலா மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் எரிசக்தி துறை அரசு முதன்மை செயலாளா் அனில் மேஷ்ராம் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, ஆற்காடு வட்டம், லாடவரம் கிராமத்தில் மத்திய அரசின் பிஎம் - குசும் திட்டத்தின் கீழ், சோலாா் மின் தகடு மூலம் 2 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருவதை பாா்வையிட்டு, மின்உற்பத்தி நிலவரம் குறித்துக் கேட்டறிந்து, வழிகாட்டுதல்களை வழங்கினாா்.

இந்த அமைப்பின் மூலம் ஆண்டுக்கு 36 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, மின்சாரத் துறைக்கு வழங்கப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோலாா் மின் உற்பத்தியின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாக எரிசக்தித் துறை அரசு முதன்மை செயலாளா் தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து, ஆற்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 110/33-11 கிலோ வாட் துணை மின் நிலையத்தினையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் சி.பேபி இந்திரா, வேலூா் மின்பகிா்மான வட்டம் மேற்பாா்வை பொறியாளா் மயில்வாகனன், செயற்பொறியாளா்கள் மற்றும் பொறியாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.