தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு:  சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2019, 7:49 am

DIN

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
வடமேற்கு வங்க கடலில் உருவாகி இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

சென்னையை பொறுத்தவரை வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்யக் கூடும். தென்மேற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதியில் மணிக்கு 40 கி.மீட்டர் முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். அதிகபட்சமாக நீலகிரியின் அவலாஞ்சி பகுதியில் 41 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது என்றார். 

இதனிடையே கடலூர், பாம்பன், தூத்துக்குடி, வ.உ.சி. துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.