கோளாறு நீக்கம்: சென்னை மெட்ரோ இலவசப் பயணம் நிறுத்தம்
சென்னை மெட்ரோ ரயிலில் சனிக்கிழமை காலை பயணிகள் அனைவரும் இலவசமாக பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.


சென்னை மெட்ரோ ரயிலில் சனிக்கிழமை காலை பயணிகள் அனைவரும் இலவசமாக பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் மற்றும் தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் சனிக்கிழமை காலை முதல் ஏற்பட்ட கோளாறு காரணமாக அனைத்து மெட்ரோ ரயில்களிலும் பயணிகள் அனைவரும் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து விமான நிலையம், வண்ணாரப்பேட்டை மற்றும் அரசினர் தோட்டம் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் இப்பழுதை சீர்செய்யும் பணி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் மற்றும் தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டது. இதையடுத்து பயணிகளை இலவசமாக அனுமதித்த நிலை நிறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...