

தமிழகத்தில் இன்று லோக் அதாலத் நடைபெறுகிறது. இதில் 502 அமர்வுகளில் 2.36 லட்சம் வழக்குகள் தீர்க்கப்பட உள்ளன.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, 2019-ஆம் ஆண்டு மார்ச், ஜூலை, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் நடத்த தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
இந்த வகையில் சனிக்கிழமை, தமிழகம் முழுவதும் தேசிய லோக் அதாலத் நடைபெற்றது. நிலுவை மற்றும் சட்ட மையத்தில் தாக்கலான, வழக்குகளை விசாரிக்க லோக் அதாலத் விசாரணை இன்று நடக்கிறது.
இந்த விசாரணையில், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கேட்பு வழக்குகள், வாரிசு உரிமை கேட்பு வழக்குகள், வங்கி வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், குடும்ப வழக்குகள் மற்றும் கோர்ட்களில் பதிவு செய்யாத வழக்குகள் விசாரிக்கப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 502 அமர்வுகளில் நடைபெறும் இந்த விசாரணையில் சுமார் 2 லட்சத்து 36 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்க்கப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.