வாக்குச்சீட்டில் குளறுபடி; தாணிக்கோட்டகம் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் ரத்து
வாக்குச்சீட்டில் குளறுபடி ஏற்பட்டதால் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாணிக்கோட்டகம் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.


வாக்குச்சீட்டில் குளறுபடி ஏற்பட்டதால் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாணிக்கோட்டகம் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாணிக்கோட்டகம் ஊராட்சியின் 2-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேர் போட்டியிட்டனர்.
ஆனால், இதற்கான வாக்குச்சீட்டில் 5 சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. சுமார் 122 வாக்குகள் பதிவான நிலையில், இந்தக் குளறுபடி கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தாணிக்கோட்டகம் ஊராட்சியின் 2-ஆவது வார்டுக்கான வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. இந்த வார்டுக்கான வாக்குப் பதிவு ஜன. 1-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...