மேலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, கெடுபிடி அறிவிப்புகள், விண்ணை முட்டும் விலை வாசி உயர்வு, கலால் வரியாக மட்டும் 16 லட்சம் கோடியை மக்களிடமிருந்து வசூலித்து விட்டு பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து ஏற்றிக் கொண்டிருப்பது, 45 வருடங்களில் காணாத வேலை வாய்ப்பின்மை, “ரபேல் ஊழல்”- இப்படி கடந்த ஐந்து வருடங்கள் இந்தியாவில் ஒரு சர்வாதிகார ஆட்சியை- ஊழல்களை மூடி மறைக்கும் ஆட்சியை நடத்தி விட்டு திடீரென்று ஞானோதயம் பிறந்தது போல் மக்களவை தேர்தல் அறிவிப்பிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு “விவசாயிகளுக்கு சலுகை” என்ற பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கத்தில் “பழுது” மட்டுமல்ல- தேர்தல் ஆதாயமும் சேர்ந்தே இருக்கிறது. இறுதியாக இந்தியாவின் நிதிநிலைமை பற்றி ஒரு கற்பனைக் கோட்டை கட்டி- அதில் “எதிர்பார்க்கப்படும் வருவாயை அதிகப்படுத்திக் காட்டி, செலவுகளை செயற்கையாக குறைத்துக் காட்டி” பா.ஜ.க. அரசின் வழக்கமான கணக்கு தில்லுமுல்லுகள் மூலம் 4.5 சதவீதம் இருக்க வேண்டிய நிதிப் பற்றாக்குறை 3.4 சதவீதமாக குறைத்து காட்டப்பட்டுள்ளது.