/

ஒசூர் தொகுதியைக் காலியானதாக அறிவிக்க நடவடிக்கை: பேரவைத் தலைவர்

ஒசூர் தொகுதியைக் காலியானதாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவைத் தலைவர் ப.தனபால் கூறினார்.

Updated On :14 பிப்ரவரி 2019, 1:43 am IST


ஒசூர் தொகுதியைக் காலியானதாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவைத் தலைவர் ப.தனபால் கூறினார்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசியது:
விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி நம்மோடு இந்த அவையில் இருந்து பணியாற்றியவர்தான். அவர் பதவி பறிபோனது வருத்தம் அளிக்கத்தான் செய்கிறது. அவரும் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். ஆனால், அவருடைய ஒசூர் தொகுதியை இன்னும் காலியானதாக அறிவிக்கவில்லை. அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது பேரவைத் தலைவர் தனபால் குறுக்கிட்டுக் கூறியது: 
அது குறித்து சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.