டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

காஞ்சிபுரம் ஐஐடிடிஎம் மாணவர்களுக்கு சென்னை ஐஐடி-யில் நேரடி பிஎச்.டி. வாய்ப்பு

காஞ்சிபுரத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (ஐஐடிடிஎம்) நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், அங்கு படிப்பில் சிறந்து விளங்கும் 10 சதவீத

Updated On :14 பிப்ரவரி 2019, 2:41 am IST


காஞ்சிபுரத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (ஐஐடிடிஎம்) நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், அங்கு படிப்பில் சிறந்து விளங்கும் 10 சதவீத பி.டெக். மாணவர்கள் சென்னை ஐஐடி-யில் நேரடி பிஎச்.டி. படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை ஐஐடி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை ஐஐடி-யும், காஞ்சிபுரம் ஐஐடிடிஎம் நிறுவனமும் கூட்டு ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஐஐடிடிஎம் நிறுவனத்தில் பி.டெக். படிப்பில் சிறந்து விளங்கும் முதல் 10 சதவீத மாணவர்கள் அவர்களுடைய 6 ஆம் பருவத் தேர்வுக்குப் பிறகு சென்னை ஐஐடி-யில் நேரடி பிஎச்.டி. (ஆராய்ச்சி) படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவர். அதன் பிறகு அவர்கள் பி.டெக். படிப்புக்கான 7 ஆம் பருவம், 8 பருவத் தேர்வுகளை சென்னை ஐஐடி-யில் முடித்துக்கொள்ள முடியும்.
அதோடு, இரு நிறுவன ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கூட்டு ஆராய்ச்சி, கல்வித் திட்டங்களிலும் ஈடுபட இந்த ஒப்பந்தம் வழிவகுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.