குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

விமர்சனம் செய்ததால் அதிமுகவோடு கூட்டணி சேரக் கூடாதா?: அன்புமணி ராமதாஸ்

அதிமுகவை விமர்சித்ததால் மட்டுமே அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கக்கூடாது என்று ஏதாவது இருக்கிறதா என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார். 

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 1:45 am IST


அதிமுகவை விமர்சித்ததால் மட்டுமே அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கக்கூடாது என்று ஏதாவது இருக்கிறதா என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார். 
சென்னை தியாகராய நகரில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
அதிமுக - திமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று சொன்னது உண்மைதான். அப்போது இருந்த அரசியல் சூழல் வேறு. இப்போது இருக்கும் அரசியல் சூழல் வேறு.
தமிழக மக்களின் உரிமைகளை மீட்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த முடிவை எடுத்தோம். வெளியில் இருந்து போராடுவதால் பயன் எதுவும் இல்லை. கூட்டணிக்கு உள்ளே இருந்து வலியுறுத்தி தமிழக உரிமைகளை மீட்டெடுப்போம்.
இது மக்களவைத் தேர்தலுக்காக எடுக்கப்பட்ட முடிவு. சட்டப்பேரவைத் தேர்தல் வரும்போது அப்போதைய நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும். 
அதிமுகவைக் கடுமையாக விமர்சனம் செய்தோம் என்பது உண்மை. அப்படிப் பார்த்தால் இந்தியாவில் எந்தக் கட்சியும் எந்தக் கட்சியோடும் கூட்டணி வைக்க முடியாது.
உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் எதிரும், புதிருமாக இருந்தவர்கள். திமுக, அதிமுகவைப் போல. இப்போது அவர்கள் இணைந்து செயல்படுகின்றனர். காங்கிரஸை எதிர்த்துத் தொடங்கப்பட்ட கட்சி ஆம் ஆத்மி. இப்போது காங்கிரஸுடன் சேர்ந்து அந்தக் கட்சித் தேர்தலை அணுகுகிறது. இப்படி  உதாரணங்களைக் கூறிக் கொண்டே செல்லலாம்.
 காங்கிரஸை திமுக செய்யாத விமர்சனம் உண்டா? திமுகவையும், காங்கிரஸையும் திருமாவளவன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இப்போது அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார்.
எனவே, விமர்சனம் செய்தோம். அதை மறுக்கவில்லை. விமர்சனம் செய்ததால் கூட்டணி சேரக்கூடாது என்று ஏதாவது இருக்கிறதா?.
 அதிமுக அமைச்சர்களுக்கு எதிராக ஆளுநரிடம் ஊழல் புகார்கள் கொடுத்தது உண்மைதான்.  இன்றைக்கும் யார் தவறு செய்தாலும், அவர்கள் மீது விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. அதிமுக - பாமக கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். 
திமுக கூட்டணிக்கு அணுகியது: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் அனைத்தும் எங்களை அணுகின. திமுகவும் அணுகியது.
ஆனால்,  திமுகவுடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் மு.க.ஸ்டாலின் எங்களைக் கடுமையாக விமர்சனம் செய்யலாம். எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும் என்ற ஆதங்கத்தாலும்  அவர் விமர்சனம் செய்யலாம். ஆனால், அவரை மறுவிமர்சனம் செய்ய மாட்டோம்.
தொடர் தோல்வி: மாற்றம் முன்னேற்றம் என்று சொல்லித்தான் தேர்தலைச் சந்தித்தோம். கடுமையாக உழைத்தோம்.  ஆனால், ஒரு சட்டப்பேரவை உறுப்பினரைக் கூட மக்கள் எங்களுக்குக் கொடுக்கவில்லை. கடந்த 4 தேர்தலில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்தோம். அதனால், எங்கள் வியூகத்தை மாற்றி அமைத்துள்ளோம். அடுத்த தேர்தல் வியூகம் வேறு மாதிரியாகவும் இருக்கலாம். தருமபுரி தொகுதியில் கட்சி அனுமதித்தால் மீண்டும் போட்டியிடுவேன்.
உறவு முறிவு: காங்கிரஸ் செயல்தலைவர் விஷ்ணுபிரசாத் எங்கள் மீது விமர்சனம் வைத்துள்ளார். அவருடைய விமர்சனத்தால் எங்கள் கட்சிக்கோ, கூட்டணிக்கோ பாதிப்பு வரப் போவதில்லை. ஆனால், எனக்குத் தனிப்பட்ட முறையில் மிகப் பெரிய மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. 
திருமாவளவனுக்கு எங்களை விமர்சித்தால்தான் அவருக்கு அரசியல். அவருக்கு ஒரு சீட்டு கிடைக்கலாம். ஒருவேளை விஷ்ணுபிரசாத்தும் அப்படி நினைத்திருக்கலாம். ஒரு சீட்டுக்காக 30 ஆண்டுகால உறவு, பந்தம், பாசம், குடும்பத்தை அவர் விட்டுக் கொடுப்பார் என்று கனவில்கூட நினைக்கவில்லை என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.