துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.


சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் நிலவும் சந்தேகங்கள் குறித்து, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் ஆஜராகுமாறு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
அவர் விசாரணைக்காக வருகிற 23–ந் தேதி ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ள ஆணையம், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 21–ந் தேதியும், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை 22–ந் தேதியும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...