மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

இலங்கை கடற்படையைக் கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்

இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி 19 மீனவர்களைக் கைது செய்ததைக் கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள்

News image

காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் திங்கள்கிழமை நிறுத்திவைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள்.

Updated On :15 ஜனவரி 2019, 1:40 am IST


இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி 19 மீனவர்களைக் கைது செய்ததைக் கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் திங்கள்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதுடன் 19 மீனவர்களை கைது செய்தனர். தாக்குதலுக்குப் பயந்து கடலில் குதித்த மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், இலங்கை கடற்படையை கண்டிக்கும் விதமாக அனைத்து விசைப்படகு மீனவ சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை ராமேசுவரத்தில் நடைபெற்றது. கூட்டமைப்பின் செயலாளர் பி. ஜேசுராஜ் தலைமை வகித்தார்.
இதில் 10-க்கும் மேற்பட்ட மீனவ சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், இலங்கை கடற்படையின் தாக்குதல் மற்றும் சிறைபிடிப்புக்கு கண்டனம் தெரிவித்தும், இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் மீனவ சங்கங்களின் நிர்வாகிகள் சவரிமுத்து, ரவி,பிரபாகரன், இருதயராஜ், தட்சிணாமூர்த்தி, இளங்கோ உள்ளிட்டவர்கள் கலந்தகொண்டனர். 
இதையடுத்து திங்கள்கிழமை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதனால் 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.