கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?காங்கிரஸ் அலுவலகத்தில் ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருந்த திருடன்! கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன் அதிமுகவில் இருந்து செம்மலை விலகல் பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி கொடுத்த பங்குச் சந்தைகள்!
/

மாதா அமிர்தானந்தமயி இன்று சென்னை வருகை

மாதா அமிர்தானந்தமயி தேவி சென்னைக்கு வியாழக்கிழமை வருகை தருகிறார். தொடர்ந்து இரு நாள்கள் இங்கு தங்கியிருக்கும் அவர், பக்தர்களுக்கு அருளுரையையும்,

News image
Updated On :24 ஜனவரி 2019, 3:10 am IST


மாதா அமிர்தானந்தமயி தேவி சென்னைக்கு வியாழக்கிழமை வருகை தருகிறார். தொடர்ந்து இரு நாள்கள் இங்கு தங்கியிருக்கும் அவர், பக்தர்களுக்கு அருளுரையையும், ஆசிகளையும் வழங்க உள்ளார்.
இதற்காக விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு அம்மாவின் சிறப்புப் பிரார்த்தனை, தியானம், ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பஜனைகள் நடைபெற உள்ளன.
இதில், பங்கேற்கும் பக்தர்கள் தனித்தனியே மாதா அமிர்தானந்தமயி தேவியை தரிசிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
மேலும், அம்மாவின் வழிகாட்டுதலோடு பக்தர்கள் சனி பூஜைகள் செய்வதற்கும் வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
மாதா அமிர்தானந்தமயி சென்னை வருகையை ஒட்டி வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்களிலும் மடத்தில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. 
தரிசனத்துக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் மடம் அமைந்துள்ள பகுதியில் ஆங்காங்கே கழிப்பறை வசதிகளும், குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 
போக்குவரத்து சீரமைப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.