ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஆணவக் கொலை தொடர்பான தமிழக அரசின் அறிக்கையில் திருப்தி இல்லை: உயர் நீதிமன்றம் 

ஆணவக் கொலை தடுப்பு தொடர்பான தமிழக அரசின் அறிக்கையில் திருப்தி இல்லை என்று சென்னை  உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 ஜூலை 2019, 10:28 am

DIN

சென்னை: ஆணவக் கொலை தடுப்பு தொடர்பான தமிழக அரசின் அறிக்கையில் திருப்தி இல்லை என்று சென்னை  உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் நடைபெறும் ஆணவக்கொலைகளைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, உயர் நீதிமன்றம் கடந்த 9-ஆம் தேதி தாமாக முன்வந்து வழக்குத் தொடுத்திருந்தது. வழக்கு விசாரணையின் போது, ஆணவக் கொலை தடுப்பு  தொடர்பாக தமிழக  அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை  தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் ஆணவக் கொலை தடுப்பு தொடர்பான தமிழக அரசின் அறிக்கையில் திருப்தி இல்லை என்று சென்னை  உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்த வழக்கானது திங்கக்கிழமையன்று நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், ஆணவக்கொலை தடுப்பு தொடர்பாக இதுவரை தமிழ்நாட்டிலுள்ள காவல்நிலையங்களில் சிறப்புப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தது. 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், இருக்கும் குறைந்த ஆள்பலத்தைக் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் எப்படி சிறப்புப்பிரிவு ஏற்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பியது. அத்துடன் ஆணவக்கொலை தடுப்பு பற்றிய விழிப்புணர்வுக்காக, தமிழக அரசு ஒரு துணடறிக்கை கூட வெளியிடவில்லை என்று அதிருப்தி தெரிவித்ததுடன், தமிழக அரசின் அறிக்கையில் திருப்தி இல்லை என்றும் கருத்து தெரிவித்தது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.