டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கரூரில் தந்தை, மகன் கொலை: 6 பேர் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரண்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே திங்கள்கிழமை துன்விரோதம் காரணமாக தந்தை, மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் 6 பேர் சரண் அடைந்துள்ளனர்.

News image
Updated On :31 ஜூலை 2019, 6:06 am

DIN


மதுரை: கரூர் மாவட்டம், குளித்தலை அருகே திங்கள்கிழமை துன்விரோதம் காரணமாக தந்தை, மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் 6 பேர் சரண் அடைந்துள்ளனர்.

முதலைப்பட்டியைச் சேர்ந்த பெருமாள், பிரபாகரன், கவியரசன் உள்ளிட்ட 6 பேர் நீதிமன்றத்தில் இன்று காலை சரண் அடைந்தனர்.

குளித்தலையை அடுத்த முதலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை(65). விவசாயி. இவரது மனைவி தாமரை (60), மகன் நல்லதம்பி(45). நல்லதம்பி தனது தந்தையுடன் விவசாயம் செய்து வந்தார். 

நல்லதம்பி, அதேபகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தை 20-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்திருப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் கடந்த 24 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவின்பேரில் குளித்தலை வட்டாட்சியர், சர்வேயர் உள்ளிட்டோர் குளத்தின் ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவீடு செய்துள்ளனர். 

இந்நிலையில் திங்கள்கிழமை காலை 8 மணியளவில் போதாவூர்-மூலப்பட்டி சாலையில் முதலைப்பட்டி அருகே தனது பைக்கில் வந்துகொண்டிருந்த நல்லதம்பியை மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது. பின்னர் பேரன் பொன்னரை பள்ளி வேனில் அனுப்புவதற்கு, வீட்டின் அருகே காத்திருந்த வீரமலையையும் அந்த கும்பல் வெட்டிக்கொலை செய்தது.  

இதுகுறித்து தகவலறிந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன், குளித்தலை நகர துணைக்காவல் கண்காணிப்பாளர் சுகுமார் மற்றும் குளித்தலை போலீஸார் சம்பவ இடங்களுக்குச் சென்று இருவரது சடலத்தையும் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் மர்மநபர்கள் விட்டுச் சென்ற 3 அரிவாள்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். 

உயிரிழந்த நல்லதம்பிக்கு மனைவி தமிழரசி(39), மகன் பொன்னர்(12), மகள் இனியா(10) ஆகியோர் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.