ஊடகங்களிடம் பேசக் கூடாது என்று செய்தித் தொடர்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: அதிமுக
ஊடகங்களிடம் பேசக் கூடாது என்று செய்தித் தொடர்பாளர்களுக்கு விதிக்கப்பட்டத் தடையை அதிமுக நீக்கியுள்ளது.


சென்னை: ஊடகங்களிடம் பேசக் கூடாது என்று செய்தித் தொடர்பாளர்களுக்கு விதிக்கப்பட்டத் தடையை அதிமுக நீக்கியுள்ளது.
இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், அதிமுக செய்தித் தொடர்பாளர்கள், தலைமைக் கழகத்தில் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு ஊடகத்திலும் பத்திரிகையிலும் சமூகத் தொடர்பு சாதனங்களிலும் எத்தகைய கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கழக செய்தித் தொடர்பாளர்கள் அனைவரும் வரும் ஜூலை 1ம் தேதி முதல் தங்களுடைய பணியினை தொடர்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செய்தித் தொடர்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
அதில், பொன்னையன், பா. வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், நிர்மலா பெரியசாமி, கோவை சத்யா உட்பட 16 பேரின் பெயர்களையும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...