/

கொடியேற்றத்துடன் துவங்கிய மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா

கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவானது ஞாயிறன்று   கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:17 am

DIN

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவானது ஞாயிறன்று   கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது.  "பெண்களின் சபரிமலை" என்ற சிறப்பு பெயரில் அழைக்கப்படும்  இந்த கோயில் திருவிழா ஞாயிறன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக கோவிலின் மூலஸ்தானத்தில் இருந்து திருக்கொடி மேளதாளத்துடன் கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டது.  இதன்பின் கொடியேற்றப்பட்டு வழக்கமான பூஜைகளும் நடந்தன.

இந்த நிகழ்வில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.