சென்னை: விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் உள்ள 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களில் தனித்துப்போட்டியிடப் போவதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்திருந்தது,.
அக்கட்சிக்கு என பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்களை பெற்று நேர்காணலும் நடந்து முடிந்திருந்தது. அக்கட்சி சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் புதன் மதியம் 2 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்.
திங்களன்று கமலை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திங்களன்று கமலை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் கூறியதாவது:
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம்.
நாடாளுமன்றத் தேர்தலில் 1 தொகுதியிலும், தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் இந்திய குடியரசுக் கட்சி போட்டியிட உள்ளது.
இவை இரண்டிலும் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிட உள்ளோம்.
தமிழகத்திற்கு தேவையான ஒரு மாற்று அரசியலை மக்கள் நீதி மய்யம் வழங்கும் என்று நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - கும்பம்
தினப்பலன்கள் - மிதுனம்
தினப்பலன்கள் - தனுசு
தினப்பலன்கள் - விருச்சிகம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


