அரசு மருத்துவமனைகளில் கொடூரம்.. கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தி 15 கர்ப்பிணிகள் மரணம்
அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தியதால் கடந்த 4 மாதங்களில் 15 கர்ப்பிணிகள் மரணமடைந்துள்ளதாக


அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தியதால் கடந்த 4 மாதங்களில் 15 கர்ப்பிணிகள் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் வரை 4 மாதங்களில் தமிழகத்தின் தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி போன்ற அரசு மருத்துவமனைகளில் உள்ள ரத்த வங்கிகள் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தின் மூலம் 15 கர்ப்பிணிகள் உயிர் இழந்துள்ளனர் என்ற தகவல் அனைவரும் அதிரிச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்த தகவலை அடுத்து தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் உள்ள ரத்த வங்கிகளில் மூத்த அரசு மருத்துவர்கள் மற்றும் உயரதிகாரிகள் நடத்திய முதல்கட்ட சோதனையில், தகுதியற்றதும், கெட்டு சிதைந்து போன ரத்தத்தை ஏற்றியதால், கர்ப்பிணிகளும், குழந்தை பெற்ற தாயார்களும் இறந்துபோன விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. முறையான சீதோஷ்ண நிலையில் சேமிக்கப்பட்ட ரத்தத்தை பராமரிக்கப்படாததால் கெட்டு சிதைந்து போன ரத்தத்துக்கும், அது பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் சான்று வழங்கியிருப்பதுதான் அனைவரையும் அதிரவைக்கிறது.
இச்சம்பவம் குறித்து கடுமையான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஸ் தெரித்தவர், இதுதொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் எம்.சந்திரசேகர், கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர் நாராயணசாமி, ஓசூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சுகந்தா ஆகிய 3 ரத்த வங்கி அதிகாரிகள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்வதோடு, துறை ரீதியான நடவடிக்கையை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
அவர்கள் தவிர, 12-க்கும் மேற்பட்ட அரசு செவிலியர்கள் மற்றும் ஆய்வுக்கூட தொழில்நுட்ப வல்லுனர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தவறான ரத்தம் செலுத்தப்பட்டு கர்ப்பிணிகள் 15 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறானது என்றும், இதுபோன்று கர்ப்பிணிகள் உயிரிழந்திருக்கிறார்களா என்பதை கண்டறிய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று பீலா ராஜேஸ் கூறினார்.
கெட்டு சிதைந்த ரத்தத்தை உடலில் ஏற்றினால் என்ன செய்யும்? கொட்டு சிதைந்த ரத்தத்தை பெண்களின் உடலில் செலுத்தியதும் அவர்களுக்கு உடனடியாக பல்வேறு பிரச்னைகள் உடலளவில் எழும். சில நிமிடங்களில் வலிப்பு வந்ததுபோன்று உடல் வெட்டி வெட்டி இழுக்கும்.
அதிகபட்சமாக ரத்தத்தில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாத வகையில் 42 நாட்கள் பாதுகாக்க முடியும் என்ற நிலையில், புதிய ரத்தத்துக்கும், பழையதாகி கெட்டுப்போன தகுதியற்ற ரத்தத்துக்கும் உள்ள வேறுபாட்டை மருத்துவ தொழிலில் இல்லாத சாதாரணமான ஒருவரே பார்த்த அளவிலேயை கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் கெட்டுப்போன ரத்தத்துக்கு பாதுகாப்பானது என்று மருத்துவர்களே நற்சான்று கொடுத்திருப்பதுதான் வேதனையிலும் வேதனை என மருத்துவத்துறை சார்ந்தவர்கள் தங்களது வேதனைகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...