ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மு.க.ஸ்டாலின், சந்திரசேகர ராவ் சந்திப்பு ரத்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சென்னையில் மே 13-ஆம் தேதி சந்தித்துப் பேச...

News image
Updated On :7 மே 2019, 9:12 am

DIN

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சென்னையில் மே 13-ஆம் தேதி சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. அப்போது தேர்தல் முடிவுகளைப் பொருத்து, மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் ஆட்சி அமைப்பது குறித்து ஸ்டாலினுடன் சந்திரசேகரராவ் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயனை தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர் ராவ் திங்கள்கிழமை மாலை சந்தித்துப் பேசினார்.

தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியில் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டுள்ளார். எனவே இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு ரத்தானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் மே 19-ஆம் தேதி நடைபெறவுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரத்தின் பணிச் சுமையில் இருப்பதால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை என்று திமுக வட்டாரங்கள் செவ்வாய்கிழமை தெரிவித்தன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.