சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கடந்த தேர்தலைவிட குறைவான வாக்கு சதவீதம்: அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு பின்னடைவு

17-வது மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் சரிவை கண்டுள்ளது.

News image
Updated On :24 மே 2019, 11:14 am

DIN


17-வது மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் சரிவை கண்டுள்ளது.  

17-வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. மத்தியில் பாஜக 350 இடங்கள் வரை வெற்றி பெற்றாலும், தமிழகத்தில் அவர்களால் ஒரு தொகுதியில் கூட வெற்றபெற முடியவில்லை. மாறாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியே 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வென்றுள்ளது. இந்த வெற்றி தமிழகத்தில் வெற்றி பெற்ற கட்சிகளின் வாக்கு சதவீதத்திலும் எதிரொலித்துள்ளது.

இதன்மூலம் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாக்கு சதவீதம் கடந்த பொதுத் தேர்தலைக் காட்டிலும் இந்த முறை அதிகரித்துள்ளது. அதேசமயம் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் சரிந்துள்ளன. 

அதிமுக, 2014 பொதுத் தேர்தலில் 44.92 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால், இந்த முறை 18.48 சதவீத வாக்குகளையே அதிமுக பெற்றுள்ளது. அதேசமயம், திமுகவின் வாக்கு வங்கி கடந்த தேர்தலை காட்டிலும் 8 சதவீதம் அதிகரித்துள்ளது.  

கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்:

கட்சி20192014
அதிமுக 18.48 சதவீதம் 44.92 சதவீதம்
திமுக32.76 சதவீதம்23.91 சதவீதம்
பாஜக3.66 சதவீதம்5.56 சதவீதம்
காங்கிரஸ்12.76 சதவீதம்4.37 சதவீதம்
தேமுதிக2.19 சதவீதம் 5.19 சதவீதம்
சிபிஐ2.43 சதவீதம்0.55 சதவீதம்
சிபிஎம்2.40 சதவீதம் 0.55 சதவீதம் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.