தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தமிழகத்தில் நாளை முதல் கனமழை வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், அக்டோபர் 29-ஆம் தேதி முதல் அடுத்த 3 நாள்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை அதிகரிக்கும்.

News image
Updated On :28 அக்டோபர் 2019, 5:49 am

DIN

அரபிக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை வடக்கு நோக்கி நகா்ந்து புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு கியாா் என பெயரிடப்பட்டுள்ளது. கியார் புயல் ஓமன் நாட்டை நோக்கி நகர்ந்து கரை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், அக்டோபர் 29-ஆம் தேதி முதல் அடுத்த 3 நாள்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை அதிகரிக்கும். 

காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குகுடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தமிழக தென் மாவட்டங்களை ஒட்டிய கடற்பகுதியில், 50 முதல் 60 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும். எனவே, இந்த கடல் பகுதிகளுக்கு, இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை காலை சுமார் 1 மணிநேரம் பலத்த மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.