வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு: இணைய வழியில் 52 ஆயிரம் மனுக்கள் அளிப்பு: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டத்தின்படி, செல்லிடப்பேசி செயலி, இணையதளம் ஆகியவற்றின் வழியாக 52 ஆயிரம் மனுக்கள்
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு: இணைய வழியில் 52 ஆயிரம் மனுக்கள் அளிப்பு: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டத்தின்படி, செல்லிடப்பேசி செயலி, இணையதளம் ஆகியவற்றின் வழியாக 52 ஆயிரம் மனுக்கள் அளிக்கப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருடன் காணொலிக் காட்சி மூலமாக வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்கான செல்லிடப்பேசி செயலி, டிஜிட்டல் இணைய சேவை மையங்கள், வாக்காளர் சேவை மையங்கள், என்விஎஸ்பி., இணையதளம் ஆகியவற்றின் வழியாக 52 ஆயிரம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில், 22 ஆயிரம் மனுக்கள் செல்லிடப்பேசி செயலி வழியாகவே சரிபார்க்கப்பட்டு தீர்க்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள மனுக்களையும் தீர்க்கும் வகையிலும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தும் வகையிலும், வரும்  திங்கள்கிழமை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள துறை அதிகாரிகள், அலுவலர்களைக் கொண்டு ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டுமென ஆட்சியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டம் தொடர்பாக விரிவான பிரசாரங்களை ஆட்சியர்களை செய்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்தத் திட்டம் சிறப்பான வகையில் வெற்றிகரமான திட்டமாக உருவாக அனைவரும் ஒத்துழைப்புத் தர வேண்டுமெனவும் ஆட்சியர் கேட்டுக் கொள்ளப்பட்டதாக தனது செய்தியில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிரசாரம்: வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டம் தொடர்பாக சமூக ஊடகங்களிலும் தேர்தல் ஆணையம் சார்பாக பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை எப்படி பயன்படுத்தி வாக்காளர் பட்டியலை பிழையில்லாமல் உருவாக்குவது என்பது குறித்து யூ-டியூப்பில் விடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com