தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஜெயக்குமாருக்கு வேதம் ஓத வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை: ஸ்டாலின் பதில்

அமைச்சர் ஜெயக்குமாருக்கு வேதம் ஓத வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image

திமுக தலைவர் ஸ்டாலின்

Updated On :18 டிசம்பர் 2019, 7:35 am

DIN


சென்னை: அமைச்சர் ஜெயக்குமாருக்கு வேதம் ஓத வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை விவகாரத்தில் திமுக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்ததற்கு மு.க. ஸ்டாலின் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஸ்டாலின், அமைதியை சீர்குலைக்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறினார்.

அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா கூறுவதை அப்படியே ஏற்பவர்தான் முதல்வர் பழனிசாமி என்று ஸ்டாலின் பதில் அளித்தார்.

குடியுரிமை விவகாரத்தில் திமுக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலடி கொடுத்த மு.க. ஸ்டாலின், அமைச்சர் ஜெயக்குமாருக்கு வேதம் ஓத வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என்று கூறினார்.

திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, சாத்தான் வேதம் ஓதுகிறது என ஜெயக்குமார் விமரிசித்த நிலையில், ஸ்டாலின் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.