டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பொங்கல் பரிசுத் தொகுப்பு: நியாய விலைக் கடைகள் 11-இல் செயல்படும்

நியாய விலைக் கடைகள் வரும் 11-இல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

News image
Updated On :8 ஜனவரி 2019, 9:42 pm

DIN


நியாய விலைக் கடைகள் வரும் 11-இல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 
இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரிகள் கூறியது:-
தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நியாய விலைக் கடைகளுக்கு ஒவ்வொரு மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகள் விடுமுறையாகும். இதற்குப் பதிலாக, ஞாயிற்றுக்கிழமைகள் கடைகள் இயங்கி வருகின்றன. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருவதால், வரும் 11-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நியாய விலைக் கடைகள் செயல்படும். மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.