
சிகாகோ நகரில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் 20 பேர் கலந்து கொள்ள ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தமிழ் வளர்ச்சித் துறையின் செயலாளர் ஆ.கார்த்திக் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:-
சிகாகோ நகரில் ஜூலை 4 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தமிழக அரசு சார்பிலும், அரசு சார்பற்ற முறையில் தமிழறிஞர்களுமாக மொத்தம் 20 பேர் பங்கேற்க உள்ளனர்.
அவர்களில் அமைச்சர் க.பாண்டியராஜன் உள்பட அலுவல் சார் உறுப்பினர்கள் மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பி வர ரூ.31.62 லட்சமும், தமிழறிஞர்கள் மற்றும் தமிழ்ப் பற்றாளர்கள் பங்கேற்க ரூ.28.47 லட்சமும் என மொத்தம் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தனது உத்தரவில் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





