தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

எம்ஜிஆர் போல அரசியல் கட்சி தொடங்கும்வரை சினிமாவில் நடிப்பேன்: ரஜினி பேச்சு

சிலர் எனக்கு பாஜக சாயம் பூச நினைக்கிறார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்திருந்த நிலையில், மீண்டும் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

News image
Updated On :8 நவம்பர் 2019, 9:37 am


சென்னை: சிலர் எனக்கு பாஜக சாயம் பூச நினைக்கிறார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்திருந்த நிலையில், மீண்டும் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது, சிலர் எனக்கு பாஜக சாயம் பூச நினைக்கிறார்கள். இது அரசியலில் சகஜம் என்று கூறினார். தனக்கு காவிச் சாயம் பூச முயற்சிப்பதாக சற்று முன் கூறியிருந்த நிலையில் ரஜினி மீண்டும் பேட்டிளித்த போது, அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பதை சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் சரியான ஆளுமையான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் உள்ளது என்று திட்டவட்டமாகக் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்கும் வரை திரைப்படங்களில் நடிப்பேன். எம்ஜிஆர் கூட கட்சித் தொடங்கும் வரை சினிமாவில் நடித்தார். நான் எப்போதும் வெளிப்படையாகத்தான் பேசுவேன் என்றார் ரஜினிகாந்த்.

மிசாவில் ஸ்டாலின் கைதானது குறித்த சர்ச்சை குறித்த கேள்விக்கு அது பற்றி தனக்கு தெரியாது, அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குறிப்பிட்ட சிலர் மட்டுமே எனக்கு காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள், என்னை ஒரு கட்சிக்கு வருமாறு அழைப்பது அவர்களது விருப்பம். முடிவெடுக்க வேண்டியது நான்தான் என்றும் திட்டவட்டமாக அவரது கருத்தை தெளிவுபடுத்தினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.