தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புத்தாண்டு வாழ்த்து
நல்லிணக்கம், சகோதர உணர்வை கடைப்பிடித்து வளர்ச்சி மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிட உறுதிகொள்வோம் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.


நல்லிணக்கம், சகோதர உணர்வை கடைப்பிடித்து வளர்ச்சி மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிட உறுதிகொள்வோம் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மகிழ்ச்சிகரமான தமிழ்ப்புத்தாண்டு நன்நாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த வணக்கத்தையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தமிழ்ப்புத்தாண்டு தினமானது, ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதலாம் நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நன்நாளானது, அமைதி, வளம் மற்றும் நம்
குடும்பங்களிலே மகிழ்ச்சி உண்டாகும் வகையில் தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின் பெருமையினை பறைசாற்றும் விதமாக
அமைந்துள்ளது. தமிழகமும், தமிழக மக்களும் இந்த ஆண்டில் வளமான எதிர்காலத்தை பெற்று மகிழ்ச்சியுடன் முன்னேறிச்செல்ல வாழ்த்துகின்றேன்.
இந்நன்நாளில், நாம் அனைவரும் நல்லிணக்கம், சகோதர உணர்வுகளைக் கடைப்பிடித்து வளர்ச்சி, முன்னேற்றத்தின் மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிட உறுதி எடுத்துக்கொள்வோமாக!
மேலும், தமிழகத்தில் நிலவிவரும் கரோனா தொற்றுப் பரவலைத் தடுத்திட மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்துவரும் நடவடிக்கைகள், வழிகாட்டு நெறிகளை கவனத்துடன் பின்பற்றிடவும் முழு ஒத்துழைப்பு நல்கிடவும் கேட்டுக்கொள்கின்றேன். அனைவரும் வீட்டிலேயே தனித்திருந்து, பாதுகாப்புடன் இருக்கவும், தமிழக மக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...