தேனி மாவட்டத்தில் 18 பேருக்கு கரோனா தொற்று நீங்கி விடுவிப்பு
தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில்


தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 18 பேர் கரோனா தொற்று நீங்கி வியாழக்கிழமை, மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் தேனி அல்லிநகரம், போடி, பெரியகுளம், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய ஊர்களிலிருந்து புதுதில்லியில் நடைபெற்ற இஸ்லாமியர் மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்பட மொத்தம் 41 பேருக்கு முதல் கட்ட மருத்துவ பரிசோதனையில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனை தனி சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களுக்கு 2-ம் கட்டமாக நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த 4 பேர், போடியைச் சேர்ந்த 8 பேர், பெரியகுளத்தைச் சேர்ந்த 3 பேர், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த தலா ஒருவர் உள்பட மொத்தம் 18 பேருக்கு கரோனா தொற்று நீங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, தலா 3 பேருக்கு ஒரு வாகனம் வீதம் மொத்தம் 6 வாகனங்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கரோனா தொற்று நீங்கி விடுவிக்கப்பட்ட 18 பேரும் 14 நாட்கள் வரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவர் என்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுலர்கள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...