தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கொளத்தூர் உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கிய ஸ்டாலின்

ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் மற்றும் அம்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

News image
Updated On :19 ஏப்ரல் 2020, 5:53 am

DIN

ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் மற்றும் அம்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு உதவிகளை வழங்கினார். 

இதன்படி துறைமுகம் தொகுதியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில், 100 கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான  20 வகையான மளிகை மற்றும் உணவுப் பொருட்கள், கரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை வழங்கினார்.

எழும்பூர் தொகுதிக்குட்பட்ட ஐந்து விளக்கு குயப்பேட்டையில் 200 மட்பாண்ட தொழிலாளர்களுக்குத் தேவையான 20 அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் கரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

திரு.வி.க.நகர் தொகுதிக்குட்பட்ட டோபிக் கண்ணா பகுதியில் 10 அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை 200 சலவைத் தொழிலாளர்களுக்கு வழங்கினார்.

கொளத்தூர் தொகுதியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில், கணினி பயிற்சி மேற்கொள்ளும் 200 பயனாளிகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள், கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர், கொளத்தூர் தொகுதி, கிழக்குப் பகுதியில் உள்ள திருவள்ளுவர் மண்டபத்தில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள 6000 குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

அதேபோல், கொளத்தூர் தொகுதி, மேற்குப் பகுதியில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள 6000 குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் கரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

அடுத்ததாக, கொளத்தூர் தொகுதியில் உள்ள 'அருணோதயா ஆதரவற்றோர் இல்லத்திற்குத்' தேவையான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் கரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார். மேலும், உதவி கோரியிருந்த இரு பெண்மணிகளுக்கு காய்கறி விற்பனை செய்வதற்கு தள்ளுவண்டியும் வழங்கியதோடு, ராஜமங்கலம் காவல் நிலைய போலீசாருக்குத் தேவையான முகக்கவசங்கள், கிருமி நாசினிகள் (சானிடைசர்) உள்ளிட்ட கரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார்.

இதனையடுத்து, வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள போர்ட் ஸ்கூல் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் 200 தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர், அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட முகப்பேர் கிழக்குப் பகுதி வீரமாமுனிவர் சாலையில் கழிவுநீர்  மற்றும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் 200 பேருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், கரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.