தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சென்னையில் தவறி கீழே விழுந்த முதியவருக்கு கரோனா

சென்னை அயனாபுரத்தில் குடிபோதையில் தவறி கீழே விழுந்து இறந்தவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. 

News image
Updated On :24 ஏப்ரல் 2020, 10:52 am

DIN

சென்னை அயனாபுரத்தில் குடிபோதையில் தவறி கீழே விழுந்து இறந்தவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. 

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும், தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக 54 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்துள்ளது. 

இதில் அதிகபட்சமாக சென்னையில் 373 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை அயனாபுரத்தில் குடிபோதையில் தவறி கீழே விழுந்து இறந்த முதியவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடந்த 8 நாள்கள் சிகிச்சை பெற்ற நிலையில் 22ஆம் தேதி அந்த முதியவர் மரணமடைந்தார். 

இதையடுத்து முதியவரின் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த பரிசோதனையில் முதியவருக்கு கரோனா இருப்பது உறுதியானது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.