எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

விழுப்புரத்தில் திடீர் கூட்ட நெரிசல்: காவல்துறையினர், அதிகாரிகள் தவிப்பு

விழுப்புரத்தில் நான்கு கடையடைப்புக்கு பின்னர் சனிக்கிழமை கடைகள் திறக்கப்பட்டதும் சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாத அளவுக்கு ஏராளமான

News image
Updated On :25 ஏப்ரல் 2020, 7:22 am

DIN

விழுப்புரத்தில் நான்கு கடையடைப்புக்கு பின்னர் சனிக்கிழமை கடைகள் திறக்கப்பட்டதும் சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாத அளவுக்கு ஏராளமான பொதுமக்கள் கடைகளுக்கு திரண்டிருந்ததால் காவல்துறையினர் திணறினர். 

விழுப்புரத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில் திடீரென நான்கு நாள் கடையடைப்பும், மூன்று நாள் கடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி கடையடைப்பு முடிந்து, சனிக்கிழமை கடை திறக்கப்பட்டது.

இந்த திடீர் நடவடிக்கையால், விழுப்புரத்தில் இன்று ஏராளமான பொதுமக்கள் நேரு வீதி, காந்தி வீதி, பாகர்ஷா வீதி சந்தைகளில், கடைகளுக்கு திரண்டிருந்தனர்.

சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாத அளவுக்கு ஏராளமான கூட்டம் திரண்டு இருந்ததால் போலீஸார் திணறினர். 

தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். பின்னர் கூட்டத்தை கட்டுப்படுத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டனர்.

இதனால் ஏற்கெனவே இருந்த நடைமுறைப்படி அத்தியாவசியப் பொருள்ககளை வாங்குவதற்கான கடைகள் தினசரி குறிப்பிட்ட நேரத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.