திருச்சி காந்தி மார்க்கெட்டைச் சுற்றியுள்ள 10 வீதிகள் தனிமைப்படுத்தல்
திருச்சி காந்தி மார்க்கெட்டைச் சுற்றியுள்ள 10 வீதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.


திருச்சி காந்தி மார்க்கெட்டை சுற்றியுள்ள 10 வீதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மளிகைக்கடை, பூக்கடை, சாலையோர வியாபாரிகள் என 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், காந்தி மார்க்கெட்டை சுற்றியுள்ள, 10 சாலைகள் கட்டுப்படுத்தப்பட்டப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, இன்று முதல் 14 நாட்களுக்கு அடைக்கப்படுகின்றன என திருச்சி மாநகராட்சி ஆணையர் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
காந்தி மார்க்கெட் சுற்றுப் பகுதிகளான, நெல்பேட்டை தெரு, தர்பார் மேட்டுத் தெரு, தந்சை சாலை (எடத் தெரு), மீன் மார்க்கெட், தஞ்சை சாலை, பாலக்கரை சாலை உள்ளிட்ட 10 பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, பழக்கடை விற்பனை (நெல்பேட்டைத் தெரு)பகுதியை அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்தி மார்கெட் பகுதியில் வியாபாரிகள் முற்றுகை போராட்டம் மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...