மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

மற்ற கட்சியினரை சந்திக்கக் கூடாது என திமுக விதிகளில் இல்லை: கு.க. செல்வம் விளக்கம்

கட்சியின் மாண்பை நான் மீறியதாகக் கூறுவது சரியல்ல; மற்ற கட்சியினரை சந்திக்கக் கூடாது என திமுக விதிகளில் இல்லை என்று திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

News image
மற்ற கட்சியினரை சந்திக்கக் கூடாது என திமுக விதிகளில் இல்லை: கு.க. செல்வம் விளக்கம்
Updated On :8 ஆகஸ்ட் 2020, 8:28 am

DIN

கட்சியின் மாண்பை நான் மீறியதாகக் கூறுவது சரியல்ல; மற்ற கட்சியினரை சந்திக்கக் கூடாது என திமுக விதிகளில் இல்லை என்று திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

பாஜகவினரை சந்தித்ததை அடுத்து திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதுடன், கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இதற்கு கு.க. செல்வம் இன்று விளக்கம் அளித்துள்ளார். அதில், என்னை தற்காலிகமாக நீக்கி வைத்தது இயற்கை நீதிக்கு விரோதமானது. திமுகவினர் மற்ற கட்சியினரை சந்திக்கக் கூடாது என்று திமுக விதிகளில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

இயற்கை நீதிக்கு விரோதமானது என்பதால் என்னை  கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியதை ரத்து செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஆயிரம்விளக்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினரான கு.க.செல்வம் திடீரென பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவை தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது, பாஜகவில் தான் இணையவில்லை என்றும் தொகுதி மேம்பாட்டுக்காக கோரிக்கை விடுப்பதற்காகவே வந்ததாகவும் கூறியிருந்தாா்.

மேலும், உள்கட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என்றும், கந்தசஷ்டிக் கவசத்தை விமா்சித்த கருப்பா் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தாா்.

இந்த நிலையில், சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் பாஜகவினா் உற்சாகமான வரவேற்பு கொடுத்தனா். தியாகராய நகரில் பாஜக அலுவலகத்துக்குச் சென்றபோதும் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து ஆயிரம்விளக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கு.க. செல்வத்தை திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்து, அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பில்,  திமுகவின் தலைமை நிலையச் செயலாளா் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினா் கு.க.செல்வம் அவா் வகித்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறாா்.

திமுகவுக்கு அவப்பெயா் ஏற்படும் வகையில் செயல்படுவதையொட்டி, கு.க.செல்வம் திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதுடன், கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு அவருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறியுள்ளாா்.

இதற்கு கு.க. செல்வம் இன்று விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.