16 நாள்களுக்குப் பிறகு குறைந்தது தங்கம் விலை: ஒரு சவரன் 43,040-க்கு விற்பனை
சென்னையில் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 16 நாள்களுக்குப் பிறகு சற்று குறைந்துள்ளதை அடுத்து, ஒரு சவரன் ரூ.43,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 16 நாள்களுக்குப் பிறகு சற்று குறைந்துள்ளதை அடுத்து, ஒரு சவரன் ரூ.43,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நிகழாண்டில் ஜனவரி 3-ஆம் தேதி முதல் தற்போது(ஆகஸ்ட் 7) வரை கடந்த ஏழு மாதத்தில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.12,808 வரை உயர்ந்துள்ளது. அதிலும், ஜூலை 21-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை மட்டும் ரூ.5,712 வரை உயர்ந்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், தொழில்துறையில் தேக்கம், அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறியீடு சரிவு உள்பட பல்வேறு காரணிகளால் தங்கம் விலை படிப்படியாக உயா்ந்து வந்தது.
ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஜூலை 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், 27-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும், 31-ஆம் தேதி ரூ.41 ஆயிரத்தையும், ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரூ.42 ஆயிரத்தையும் கடந்து, புதிய உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகும் தங்கம் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமையான இன்று சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.43,040-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.36 உயா்ந்து, ரூ.5,380 ஆக உள்ளது.
இதுபோல, வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.20 காசுகள் குறைந்து, ரூ.83.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.83,400 ஆகவும் விற்பனையாகிறது.
சனிக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................... 5,380
1 சவரன் தங்கம்............................... 43,040
1 கிராம் வெள்ளி............................. 83.40
1 கிலோ வெள்ளி............................83,400
வெள்ளிக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்........................... 5,416
1 சவரன் தங்கம்............................... 43,328
1 கிராம் வெள்ளி............................. 83.60
1 கிலோ வெள்ளி.............................83,600
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...