தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

நிலச்சரிவு பாதிப்பு குறித்து கேரள முதல்வரிடம் கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி

கேரள நிலச்சரிவில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். 

News image
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Updated On :9 ஆகஸ்ட் 2020, 8:36 am

DIN

கேரள நிலச்சரிவில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். 

கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கிய  உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் பலர் காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், நிலச்சரிவில் மீட்கப்பட்டவர்கள் பலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும், மீட்புப்பணிக்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.