தமிழகத்தில் பொதுமுடக்க விதிமீறல் அபராதம் ரூ. 20 கோடி!
தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியவா்களிடம் வசூலிக்கப்படும் அபராதம் ரூ.20 கோடியை எட்டியது.


தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியவா்களிடம் வசூலிக்கப்படும் அபராதம் ரூ.20 கோடியை எட்டியது.
இது குறித்த விவரம்:
கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொது முடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்தி விதிகளை மீறுவோரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றது.
இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 8.67 லட்சம் வழக்குகளைப் பதிவு செய்து, 9.57 லட்சம் பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனா். பொதுமுடக்க உத்தரவை மீறி வெளியில் வந்தவா்களின் 6.77 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளில் சிக்கியவா்களிடமிருந்தும் ரூ.20 கோடியே 15 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...