தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.408 குறைவு

சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் சற்று குறைந்து, ஒரு சவரன்  ரூ.42,512 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

News image
Gold prices fall by Rs 408 per ounce in Chennai
Updated On :11 ஆகஸ்ட் 2020, 7:22 am

DIN

சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் சற்று குறைந்து, ஒரு சவரன்  ரூ.42,512 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

கரோனா நோய்த் தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல் உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலை தொடா்ந்து அதிகரித்து வந்தது. 

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரமாக இருந்தது. இதன்பிறகு, நாள்தோறும் விலை அதிகரித்து, கடந்த 5-ஆம் தேதி ரூ.42 ஆயிரத்தையும், 7-ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது.

இந்த நிலையில், சென்னையில் இன்று ஒரு சவரன் ரூ.408 குறைந்து, ரூ.42,512-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.51 குறைந்து, ரூ.5,314 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரத்தில், வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.50 உயர்ந்து ரூ.84.90 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.84,900 ஆகவும் விற்பனையாகிறது. 

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்........................... 5,314

1 சவரன் தங்கம்...............................42,512

1 கிராம் வெள்ளி.............................84.90

1 கிலோ வெள்ளி.............................84,900

திங்கள்கிழமை விலை  நிலவரம் 

1 கிராம் தங்கம்............................... 5,365

1 சவரன் தங்கம்............................... 42,920

1 கிராம் வெள்ளி............................. 83.40

1 கிலோ வெள்ளி............................83,400

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.