42 ஆயிரத்துக்குக் கீழ் இறங்கியது ஒரு சவரன் தங்கம் விலை
சென்னையில் அண்மையில் 43 ஆயிரத்தைத் தாண்டிய தங்கத்தின் விலை இன்று ஒரேநாளில் ரூ.984 குறைந்து 42 ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியுள்ளது.


சென்னையில் அண்மையில் 43 ஆயிரத்தைத் தாண்டிய தங்கத்தின் விலை இன்று ஒரேநாளில் ரூ.984 குறைந்து 42 ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியுள்ளது.
கரோனா நோய்த் தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல் உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலை தொடா்ந்து அதிகரித்து வந்தது.
ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரமாக இருந்தது. இதன்பிறகு, நாள்தோறும் விலை அதிகரித்து, கடந்த 5-ஆம் தேதி ரூ.42 ஆயிரத்தையும், 7-ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது.
இந்த நிலையில், சென்னையில் இன்று மாலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.984 குறைந்து, ரூ.41,936-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.123 குறைந்து, ரூ.5,242 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில், வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.40 குறைந்து ரூ.82.80 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.82,800 ஆகவும் விற்பனையாகிறது.
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்........................... 5,242
1 சவரன் தங்கம்...............................41,936
1 கிராம் வெள்ளி.............................82.80
1 கிலோ வெள்ளி.............................82,800
திங்கள்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................... 5,365
1 சவரன் தங்கம்............................... 42,920
1 கிராம் வெள்ளி............................. 83.40
1 கிலோ வெள்ளி............................83,400
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...