தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்குவது கொள்கை முடிவு: தமிழக அரசு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்குவது என்பது கொள்கை முடிவு என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

News image

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தைநினைவு இல்லமாக்குவது கொள்கை முடிவு: தமிழக அரசு

Updated On :12 ஆகஸ்ட் 2020, 8:03 am

DIN


சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்குவது என்பது கொள்கை முடிவு என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்குவதை எதிர்த்து, அவரது அண்ணன் மகன் தீபக் சார்பில் தொடரப்பட்ட வழக்கை ஏற்கனவே விசாரித்த அமர்வு, நினைவு இல்லமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என பரிந்துரைத்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று பதில் அளித்துள்ளது.

பதிலில், வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்குவதை மறுபரிசீலனை செய்யுங்கள் என்ற பரிந்துரையை ஏற்க முடியவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், நினைவு இல்லமாக்குவது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்பதால் அதனை மறுபரிசீலனை செய்யுங்கள் என்ற கோரிக்கைய ஏற்க முடியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.