தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி வாழ்த்து
கிரிக்கெட் வீரர் தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும் என தோனிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


கிரிக்கெட் வீரர் தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும் என தோனிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.
தோனியின் ஓய்வு அறிவிப்பை அடுத்து, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், '331 சர்வதேசப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தியதற்காகவும், நாட்டிற்காக 3 சாம்பியன்ஷிப்பை வென்ற ஒரே கேப்டனான, 'கேப்டன் கூல்' எம்.எஸ்.தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும். அவரது சாதனைகளும், புகழும் ஒவ்வொரு இந்தியராலும் பேசப்படும்' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...