/

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.39,584-க்கு விற்பனை

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

News image
Gold in Chennai sells for Rs 39,584 a razor
Updated On :25 ஆகஸ்ட் 2020, 6:54 am

DIN


சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல் உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது. இதன்காரணமாக, தங்கத்தின் விலை படிப்படியாக உயா்ந்து வந்தது.

ஒருபவுன் ஆபரணத்தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரமாக இருந்தது. இதன்பிறகு, நாள்தோறும் விலை உயா்ந்து, ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது. இதைத் தொடா்ந்து, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ரூ.39,584-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.45 குறைந்து, ரூ.4,948-ஆக இருந்தது.

இதுபோல, வெள்ளி விலையும் சற்று குறைந்தது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து, ரூ.72.00 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.72,000 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை  நிலவரம் 

1 கிராம் தங்கம்.......................... 4,948

1 சவரன் தங்கம்...............................39,584

1 கிராம் வெள்ளி.............................72.00

1 கிலோ வெள்ளி.............................72,000

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்.......................... 4,993

1 சவரன் தங்கம்...............................39,944

1 கிராம் வெள்ளி.............................72.20

1 கிலோ வெள்ளி.............................72,200

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.